بسم الله الرّحمن الرّحيم
இன்று நாம் கருத்து பரிமாறி ள்ளப்போவது எங்கள் மத்தியில் தாண்டவமாடும் மிகவும் கவலைக்குறிய தொரு விடயம். – முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் தவா்களுக்கிடையிலும் பெறும் வேறுபாடுகள் இருக்கின்றன என்று முஸ்லிம்களுள் பலா் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் – எந்த அளவுக்கென்றால் – ழ்ழாஹ் முஸ்லிம்களை விரும்புகிறான் முஸ்லிம் அல்லாதவா்களை அழ்ழாஹ் விரும்பவில்லை.
முஸ்லிம்களுக்கு அழ்ழாஹ்வின் மன்னிப்பு உண்டு – முஸ்லிம் அல்லாதவா்களுக்கு மன்னிப்பு இல்லை.
முஸ்லிம்கள் சுவா்க்கம் செல்வார்கள் முஸ்லிம் அல்லாதவா்கள் நரகம் செல்வார்கள்.
இவ்விரு சாரார் மத்தியிலும் ஏன் இவ்வளவு வேற்றுமைகள் ?
முஸ்லிம் அல்லாதவா்கள் உங்களைப் போன்றே ஆதம் ஹவ்வாவின் மக்களே.
உங்களைப் போன்றே அவர்களும் மனிதர்கள்தான் – அவர்களுக்கும் கைகளும் – கால்களும் – கண்களும் – காதுகளும் இருக்கத்தான் செய்கின்றன.
நீங்கள் சுவாசிக்கும் அதே காற்றுதான் அவர்களுக்கும்
நீங்கள் அருந்தும் அதே நீரைத்தான் அவர்களும் குடிக்கின்றார்கள்
நீங்கள் வாழும் நாடுகளிலே தான் அவர்களும் வாழ்கிறார்கள்.
உங்களைப் படைத்த அதே அழ்ழாஹ்தான் அவர்களையும் படைத்தான் –
அப்படியிருக்க நீங்கள் ஏன் உயர் தலத்திலும் அவர்கள் கீழ்த்தரத்திலும் என்று எண்ணுகிறீர்கள் ?
உங்களுக்கு அப்துல் ரஹ்மான் – அப்துழ்ழாஹ் போன்ற பெயர்களும் –
அவர்களுக்கு பெரேரா – ஸ்மித் – கந்தையா போன்ற பெயர்கள் இருப்பதாலேயா ?
அவர்கள் ஒரு வகை உணவை சாப்பிடுகிறவர்கள் நாம் அவைகளை சாப்பிடுவதில்லை – இவைகள் தானா காரணங்கள் ? – சிந்தனை செய்யுங்கள், மனிதர்களையும் எல்லா ஜீவராசிகளையும் படைத்தது அழ்ழாஹ்தான். அவனே எல்லோரையும் பேனி பாதுகாக்கிறன் -
அவனே எல்லோருக்கும் உணவு அளிப்பவன் – அப்படியிருக்க நாங்கள் எண்ணிக் கொண்டிருக்கும் அற்ப காரணங்களுக்காக தானா அழ்ழாஹ் எங்களை சுவர்க்கத்துக்கும் அவர்களை நரகத்துக்கும் அனுப்புகிறான் ?
நியாயமாக சிந்திப்போம் – நாங்கள் முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்கிறோம் – அதே வேளை அல் குர்ஆனின் போதனைகளை சரிவர அறிந்திருக்கவில்லை – கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் முன்மாதிரிகள் என்ன என்றே எமக்கு தெரியாது.
அவர்கள் காட்டிய வழியை புறக்கணிக்கிறோம் – அலட்சியம் செய்கிறோம்.
அப்படி ஒரு நிலையிருக்க – எமக்கு சூட்டப்பட்ட பெயரிலும் – நாம் அணியும் உடையிலும் – நாம் உண்ணும் உணவிலும் வித்தியாசம் இருப்பதனால் சுவா்க்கத்துக்கு பொருத்தமுள்ளவர்கள் என்று கூற முடியுமா ?
இந்த அடிப்படையில் துனியாவிலும் ஆகிரத்திலும் அழ்ழாஹ்வின் அருட்கொடைகளுக்கு உரிமை உடையவர்கள் என்று வாதாடலாமா ? சிந்தியுங்கள் .. !
இஸ்லாம் என்பது ஒரு சாதி அல்ல – அது ஒரு குடும்பம் சார்ந்த இனம் அல்ல – தகப்பனிடம் இருந்து மகனுக்கு அதன் அங்கத்துவப் பொறுப்பு தானாகவே மாறும் ஒரு அமைப்பும் அல்ல.
மனிதர்களால் அமைக்க பெற்றிருக்கும் உயர்சாதி என்பவர்களின் பிள்ளைகள் அல்லது மதத்தலைவரின் மகன் என்பதனால் அவனின் தீய பழக்க வழக்கங்கள் அழ்ழாஹ்வின் முந்நிலையில் மரியாதை கொடுக்கப்படவும் மாட்டாது -
மனிதர்களால் அமைக்க பெற்றிருக்கும் கீழ்சாதியினரின் ள்ளைகள் அல்லது மதத்தலைவரின் மகன் என்பதனால் அவர்களின் நல்ல பழக்க வழக்கங்கள் அழ்ழாஹ்வின் முந்நிலையில் கரிக்கப்படவும் மாட்டாது -
அழ்ழாஹ்வின் சந்நிதானத்தில் மதிப்பீடு செய்யப்படும் விடயம் மனிதனின் அறிவாற்றளும் – அந்த அறிவாற்றளுக்கு ஏற்ப மலுன் ஸாலிஹ் என அல்-குர்ஆனில் கூறப்படும் நல்லொழுக்கமும் நற்செயல்களும் தான்.
தீய நடத்தையுடையவர்கள் அவர் அப்துல் ரஹ்மான் – ழாஹ்வாக இருந்தாலும் சரியே – பெரேரா – ஸ்மித் – கந்தையா ஆக ந்தாலும் சரியே அழ்ழாஹ்வின் முந்நிலையில் அவனது புனித அருட்கொடைளுக்கு அருகதை அற்றவர்களே.
எனது உடன் பிறப்புகளே – முஸ்லிம்கள் என்று உங்களை கூறிக்கொள்கிறீர்கள் – இன்னும் அழ்ழாஹ் அவனது புனித ரஹ்மத் உங்கள் மீது மாறி பொழிவான் என்றும் நம்புகிறீர்கள்.
உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள் அந்த ரஹ்மத் உண்மையிலேயே உங்கள் மீது இரங்குகின்றனவா என்று பாருங்கள் –
மௌத்து வரும்வரை ஆகிரத்தில் என்ன நடக்கும் என்பதை அறியமாட்டீர்கள் – ஆனால் இந்த பூமியில் உங்களது உண்மையான நிலை என்ன நடக்கும் என்பதை நிச்சயமாக அறிகிறீர்கள்.
இவ்வுலகில் 120 கோடிக்கு அதிகமானவா்கள் முஸ்லிம்கள் – ஒவ்வொருவரும் ஒரு சிறு கல்லை எறிந்தால் ஒரு மலையே உருவாகிவிடும் – இவ்வளவு முஸ்லிம்கள் இருந்தும் முஸ்லிம் அரசாங்கங்கள் இருந்தும் – அழ்ழாஹ்வை எதிர்த்து நிற்பவர்கள் கைகளில் தான் இவ்வுலக ஆட்சி அமைக்கப்பெற்றிருக்கிறது.
உங்கள் கழுத்துக்கள் அவர்கள் கைப்பிடியில் தான் இருக்கின்றன. அழ்ழாஹ்வுக்கு மாத்திரம் தலை வணங்கும் இந்த சிரம் – மனிதன் முன் தலை குனிந்து நிற்கிறது.
ஒருவராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாதிருந்த முஸ்லிம்களின் பெருமதிப்பும் கீா்த்தியும் இன்று காலின் கீழ் வைத்து மிதித்து நசுக்கப்பட்டு இருக்கிறது.
மேலோங்கியிருந்த உங்களது கைகள் இன்று கீழாகவும் எதிரிகள் முந்நிலையில் கை நீட்டி பிச்சை வாங்குகிறது.
அறிவின்மையும், மடமையும், செல்வாக்கு குறைந்த நிலையிலும் – வறுமையிலும் – மற்றவா் தயவிலும் – கடனாளிகளாகவும் இழிவு நிலையில் தான் நாம் இன்று முஸ்லிம் சமுதாயத்தை காண்கின்றோம்.
இது அழ்ழாஹ்வின் புனித ரஹ்மத் இரங்குவது போன்றா இருக்கின்றது?
இது அழ்ழாஹ்வின் கோபம் போன்றல்லவா இருக்கின்றது ! அப்படி என்றால் இந்த கோபம் முஸ்லிம்கள் மீது இறங்குகிறது என்றால் – இது ஆச்சரியத்துக்கான விசித்திரமான விடையம் அல்லவா ?
அழ்ழாஹ் நீதம் உடையவன் – அவன் நியாயமற்றவன் அல்ல
அழ்ழாஹ்வின் ஆணைப்படி கீழ்ப்படிந்து நடந்தால் ஒரு போதும் அவமானம் அடைய மாட்டோம் –
இதை நாம் உறுதியாக நம்புகிறோம் – அப்படியென்றால் – நாம் முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்வதில் ஏதோ ஒரு குறை இருக்கிறது எனும் உண்மையை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
எமது பிறப்பு சான்றிதல்களில் – Birth Certificate களில் “முஸ்லிம்” என்று பதிவு செய்யப்பட்டிருக்கக் கூடும் – ஆனால் அழ்ழாஹ் அஸ்ஸவஜல்- காகிதத் துண்டுகளில் எழுதியிருப்பவைகளில் இருந்து தீா்ப்பு கூறுவதில்லை.
பணிவுடன் கீழ்ப்படிந்து நடக்கிறவா்களையும் – கீழ்ப்படிய மறுக்கின்ற – ஆணையை மீறுகின்றவா்கள் யார் என்று காட்டப்படும் சொந்த பட்டியல் ஒன்றை, படைத்தவன் அழ்ழாஹ் அஸ்ஸவஜல்- தயார் செய்கிறான் உங்களது உண்மையான நிலையை இந்த பட்டியலில் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
புனித அல்-குர்ஆன் அழ்ழாஹ் அஸ்ஸவஜலின் அருள் மறை என்பதை அறிந்திருந்தும் – அதைப்பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள் போல் நடக்குகிறீர்கள்.
கண்மணி நாயகம் مُحَمَّدْ நபி (ஸல்) அவர்கள் அழ்ழாஹ்வின் கண்ணியமிக்க தூதர் என்பதனை நாம் அறிவோம் – என்றாலும் முற்றிலும் அவர்களை பின்பற்ற தயங்குகிறோம்.
அழ்ழாஹ் அஸ்ஸவஜல் பொய்யனை சபித்து இருக்கிறான்.
இலஞ்சம் வாங்குபவனும் இலஞ்சம் கொடுப்பவனும் – இவ்விருவரும் நரக நெருப்புக்கு உரித்தானவர்கள் என்று திட்டவட்டமாக கூறப்பட்டிருக்கிறது.
வட்டிக்கு பணம் கொடுப்பவனும் வட்டிக்கு பணம் வாங்குபவனையும் விட மோசமானவர்கள் இல்லை என்று கண்டணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவரை பற்றி புறம் பேசுவதும் அவதூரு கூறுவதும் தனது இறந்த சகோதரரின் மாமிசத்தை சாப்பிட்டவர் போலாவார் என்று கண்டிக்கப்பட்டிருக்கிறது.
இழிவான, கேவலமான, கீழ்த்தரமான நடத்தையும், வரம்பு மீறிய ஒழுக்க்கேடும், விபச்சாரமும் – கடினமான தண்டனைக்கு உள்ளாக்கப்படும் என்று முன் எச்சரிக்கை செய்யப்பட்டு இருக்கிறது.
இவை எல்லாம் அறிந்திருந்தும் தெரிந்திருந்தும் – இந்த ஒழுக்க்கேடான நடத்தைகளை சர்வசாதாரணமாக – அழ்ழாஹ்வின் வெறுப்புக்கு ஆளாகாதவர்கள் போன்றல்லவா நடக்குகிறோம்.
வெளி தோற்றத்தில் மட்டும் தான் முஸ்லிம்களாக இருக்கிறோம்.
அழ்ழாஹ் எமக்கு தந்க மாபெரும் நன்கொடை இஸ்லாம் – இதற்கு நாம் மதிப்பு கொடுக்காததால் நாம் அவமதிப்புக்கும் இழிவுக்கும், அவமானத்துக்கும் உள்ளாக நேர்ந்திருக்கிறது எனபதனை ஒருவராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.
அருள் மறையாம் அல்-குர்ஆனில் அழ்ழாஹ் கூறும்போது
فَوَرَبِّ السَّمَاءِ وَالأرْضِ إِنَّهُ لَحَقٌّ مِثْلَ مَا أَنَّكُمْ تَنْطِقُونَ
என கூறுகிறான் – அதாவது
51:23 ஆகவே, வானங்கள், பூமி ஆகியவற்றின் இறைவன் மீது ஆணையாக நீங்கள் அறிவுத்திறமையோடு பேசும் உங்கள் வார்த்தையாக இருப்பது – இது பிரத்தியட்சமான உண்மையாகும்.
அழ்ழாஹ் مِثْلَ-; أنْطَقَபோன்ற சொற்களை உபயோகித்திருக்கிறான்.
அதாவது உங்கள் பேச்சில் – பழமொழிகள், மூதுரைகள், ஒப்பிட்டு பேசும் சம்பவங்கள், இனையற்ற புதுமையான உதாரணங்களுடன் நீங்கள் பேசுவீர்களாயின் நிச்சயமாக பிரத்தியட்சமான உண்மைகள் வெளியாகும் – என்று அல்-குர்ஆன் எமக்கு அறிவுறுத்துகிறது.
எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் அறிவுத்திறமையோடு பேசுகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு பிரத்தியட்சமான உண்மைகள் வெளியாகிறது. இது அல்-குர்ஆனின் கூற்று.
மீண்டும் அல்-குர்ஆனிலே –
ادْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِي هِيَ أَحْسَنُ
அதாவது
16:125 (நபியே) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக ! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் கருத்து பரிமாறிக் கொள்வீராக.
அதாவது அழ்ழாஹ்வின் பாதை – சமாதானம், ஒற்றுமை
இணக்கத்தின் பாதையில் அழைப்பு விடும்போது அறிவுத்திறனோடும், அழகிய பாணியில் – ஒழுக்கத்துடனும், மறியாதையுடனும், அடக்கத்துடனும் நடப்பது மாத்திரம் அல்லாமல் கருத்து பரிமாறிக் கொள்ளும்போது கருணையுடனும் இனிய பண்புடனும் கருத்து பரிமாறிக் கொள்வீராக.
என்று புணித அல்-குர்ஆன் எமக்கு அறிவுறுத்துகிறது.
இன்னும் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களுக்கு கட்டளையிடும்போது அழ்ழாஹ் கூறுகிறான் –
فَبِمَا رَحْمَةٍ مِنَ اللَّهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لانْفَضُّوا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الأمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ
3:159 அழ்ழாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் நீர் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்.
(சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமுகத்தைவிட்டும் ஓடியிருப்பாப்கள். எனவே அவர்களின் )பிழைகளை( அலட்சியபடுத்தி விடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்துவிட்டால் அழ்ழாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக. நிச்சியமாக அழ்ழாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.
இப்படிப்பட்ட வழிகாட்டல்கள் எமக்கு எங்கே தான் கிடைக்கப் போகிறது.
இந்த கண்ணோட்டத்தில் மார்க்க சம்பந்தமுடைய சமுதாயங்கள் மீது சற்று கவணம் செலுத்தினால் துரதிருஷ்ட வசமாய் உலகலாவிய மட்டத்தில் நாம் காணுவது – “” எமக்கு ஒரு மார்க்கம் – ஒரு சமயம் இருந்தால் மனிதனின் பகுத்தறிவுக்கே அவசியமில்லை” என்கிற தவறான கருத்து தாண்டவமாடுகிறது.
இப்படி ஒரு மனிதன் பேசும்போது மார்க்கமத்தை அறிந்து கொள்வதற்கு பகுத்தறிவின் அவசியத்தையே மறந்து விடுகிறான்.
இது ஒரு புறம்.
மற்ற புறத்தில் எல்லா விதமான தலைவர்களும் – அதாவது – மார்க்க தலைவர்கள் – அரசியல்வாதிகள் – சமுதாய தலைவர்கள் போன்றவர்கள் உபயோகிக்கும் ஒரு சொற்றொடர் – ’’ வாருங்கள் நாம் உரையாடல் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம்”
உண்மையிலேயே உரையாடல் என்றால் என்னவென்றே அவர்கள் அறியமாட்டார்கள்.
ஒரு சாரார் மற்றவருக்கு மதிப்பு கொடுத்து – நாம் அனைவரும் சமமான நிலையில் இருக்கிறோம் – எனறிருந்தால் தான் உரையாடல் ஒன்றை நடத்த முடியும்.
அப்படி என்றால் எமது கருத்துக்களை மற்றவர்மீது வற்புறுத்தி சுமத்த முடியாது.
ஒருவர் மற்றவரின் தனித்தன்மைக்கு மதிப்பு கொடுத்து – அவரவர் கருத்தாய்வுகள்- சமுதாய நேர்மை போன்ற விடயங்களுக்கு மதிப்பு கொடுத்து பேசுவது அத்தியாவசியமாகும்.
இந்த காலகட்டம் ஒழுக்கக்கேடுகள் – மனநோய் – பல்வேறு மிருகத்தையும் விட கேடுகெட்ட வெறிபிடித்த நடத்தை – அது அறிவாற்றலிலும் தான் இருக்கிறது.
மார்க்க, குடும்ப, சமயகோற்பாடுகள் சின்னாபின்னமாக்கி நிராகரிக்கப் படுகின்றன –
நயவஞ்சகம், சூழ்ச்சி, இரண்டகம் போன்ற தீய சக்திகள் குடி கொண்டு – இறுமாப்பு, திமிர், அகந்தை, சகிப்புத்தன்மையற்ற சீர் கேடுகள் மனித சமுதாயத்தில் கட்டவிழ்க்கப்பட்டுள்ளதை இன்று நாம் காண்கிறோம்.
எமது முஸ்லிம் சமுதாயம் அறிந்திருக்க வேண்டும் – பல இன – பல மத உலகில் அல்லது எமது நாட்டைப் போன்ற ஒரு நாட்டில் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை அல்-குர்ஆன் அழகாக விளக்குகிறது.
قُلْ يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ
புனித அல்-குர்ஆன் கூறும்போது :
3:64 (நபியே அவர்களிடம் கூறுங்கள்) வேத்தையுடையோரே – மார்க்கம் உடையோரே சமயங்கள் உடையோரே வாருங்கள் – நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்.
எம்மத்தியில் எந்த பொது விடயங்களில் நாம் ஒன்று படுகிறோமோ, எந்தெந்த விடயங்களை நாம் பொதுவாக ஏற்றுக்கொள்கிறோமோ – ஒத்துக்கொள்கிறோமோ – அவைகளை கருத்து பரிமாரிக்கொள்ள வாருங்கள்.
கருத்து வேறுபாடுகள் உள்ளவையல்ல – நாம் சர்ச்சை செய்யும் விடயங்கள் அல்ல – என்று மற்ற சமுதாயங்களையும் – மற்ற மதங்களை உடையோரையும் அழையுங்கள் நபியே என்று அழ்ழாஹ் கட்டளை இடுகின்றான்.
எல்லோர் மத்தியிலும் ஒற்றுமையும், நம்பிக்கையம், ஆதரவும் உண்டாக்கும் இந்த அல்-குர்ஆனின் கருத்து எவ்வளவு மேலானது எனபதனைப்பாருங்கள்.
ஒவ்வொரு குடும்பத்திலும் சா்ச்சை இருக்கத்தான் செய்கிறது. தாயும் தகப்பனும் எல்லாவற்றையும் எந்நேரமும் ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள்
பெற்றோர்களும் பிள்ளைகளும் சில விடயங்களை ஏற்றுக்கொள்வதில்லை.
சகோதரர்கள் சகோதரிகள் மத்தியில் வேறுபாடுகளும் வேற்றுமைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
அப்படியென்றால் சமுதாயங்கள் – சமயங்கள் மத்தியில் எவ்வளவு வேறுபாடுகள் இருக்கும்.?
ஆகவே புனித அல்-குர்ஆன் எமக்கு தரும் அறிவுரையின் சிறப்பையும் ஆழத்தையும்
அவதானிக்கலாம் அல்லவா?
சமாதானத்துடனும் – ஒற்றுமையுடனும் – அமைதியாக சாந்தமான முறையில் எல்லோருடனும் வாழ வேண்டும் என்று அல்-குர்ஆன் வழியுறுத்துவதை நாம் காண்கின்றோம்.
அல்-குர்ஆன் மேலும் கட்டளை இடுகிறது :
وَلا تَسُبُّوا الَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ
6:108 – அவர்கள் அழைக்கும் அழ்ழாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீா்கள்
அதாவது அவர்கள் நீங்கள் வணங்கும் அழ்ழாஹ்வை வணங்கவில்லை என்பதற்காக அவர்களை நீங்கள் நிந்திக்காதீா்கள் – என்று அல்-குர்ஆன் வண்மையுடன் கட்டளை இடுகிறது.
அல்-குர்ஆனின் சட்டங்களில் இது ஒரு கடுமையான ஆணை என்பதை மறக்க வேண்டாம்.
மற்றவா்களுடைய மார்கத்தையோ – அவர்கள் சமய வழி முறைகளையோ – இகழ்ந்து பேசவோ – அவமதித்து பேசவோ இஸ்லாத்தில் இடமேயில்லை என்பதை நன்றாக கவணிக்க வேண்டியதொன்று.
எங்கள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:
قال رسول الله (ص):
القُرْءانُ مأ ْدَبة ُ اللهِ فَتَعَلَّمُوا مَأ ْدَبَتَهُ مَا اسْتَطَعْتُمْ
அல்-குர்ஆன் அழ்ழாஹ்வின் பல்கலைக் கழகம் – ஆகவே எவ்வளவுக்கெவ்வளவு இந்த பல்கலைக் கழகத்தில் கற்றுக்கொள்ள முடியுமோ அவ்வளவையும் கற்றுக்கொள்ளுங்கள்.
மஃதபஹ் – مئدبة – முஃஅத்தப் - مئدب – என்றால் – கல்விபுகட்டுகிறவர் – ஆசிரியர் – ஆசான் – பயிற்சி ஆசிரியர் – ஒழுங்கு படுத்துகிறவர் –
أدَبْ – என்றால் – பண்புள்ள பழக்க வழக்கம் – அடக்கம் – மறியாதை – நற்பண்பு – அன்பு – நேர்த்தி – போன்ற அர்த்தங்கள் தருகின்றன.
ஆகவே அல்-குர்ஆன் தரும் – அறிவு – பயிற்சி – அது கற்றுத்தரும் ஒழுங்கு முறைகள், உங்களை பண்புள்ளவனாக, அடக்கம், மறியாதை உள்ளவனாக, நற்பண்புகள் பொதிந்தவனாக, அன்புடையவனாக, நேர்த்தியுள்ளவனாக ஆக்க வேண்டும்.
எங்கள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் இந்த குணவியல்புகளை நடைமுறையில் காட்டிய விதத்தை சற்று அவதானிப்போம் :
قال رسول الله (ص):
الكَلِمَةُ الْحِكْمَةُ ضَالَّةُ الْحَكِيْمِ فَحَيْثُ وجدها فَهُوأحَقُّ بِهَا
அவர்கள் சொன்னார்கள் – அறிவு இருக்கின்றதே – அது சிந்தனையுடைய, கல்வி நல்லறிவுள்ளவரின் காணாமற்போன ஒரு பொருள். அதை எங்கே கண்டாலும் அவன் எடுத்துக் கொள்ளட்டும். அது அவனுடைய சொத்து.
அறிவாற்றல் உடையவர்கள், ஆசான்கள் காலடியிலிருந்து நல்லறிவு கற்கவேண்டும் என்று உத்தரவு பிரபித்தார்கள். கற்கின்ற அறிவு சிந்தனை உள்ளவரிடம் சங்கையாக பாடங்கள் கற்றுக்கொள்வது – இது மற்றவர்களுடன் ஒன்றினைந்து – அவர்கள் அறிவாற்றலுக்கு மதிப்பு கொடுத்து வாழும் சகிப்புத்தன்மையை வளர்க்கிறது.
vq;fs; fz;kdp ehafk; (]y;) xU ehs; mth;fSil r`hghf;fNshL gs;spthay; mUNf ,Uf;Fk;NghJ xU rt Ch;tyk; nry;tijg;ghh;j;jJk; clNd vOe;J epd;W khpahij nra;jhh;fs;. mth;fNshL ,Ue;j r`hghf;fs; $wpdhh;fs; – mo;oh`;tpd; u#Ny ,J xU a`{jpapd; rtCh;tyk; vd;whh;fs; -
vq;fs; fz;kdp ehafk; (]y;)a`{jpahapue;jhYk; – fpwp];jtuhapUe;jhYk; – K];ypkhapUe;jhYk; – k[{]pahapUe;jhYk; – ve;j kjj;ij rhh;e;jthpd; ika;aj;jhf ,Ue;jhYk; rhpNa vOe;J epd;W mth; nry;Yk; filrp gpuahzj;Jf;F khpahij nra;Aq;fs; “ vd;W jpUtha; kyh;e;jUspdhh;fs;.
எங்கள் கண்மணி நாயகம் (ஸல்) ஒரு நாள் அவர்களுடைய சஹாபாக்களோடு பள்ளிவாயல் அருகே இருக்கும்போது ஒரு சவ ஊர்வலம் செல்வதைப் பார்த்ததும் உடனே எழுந்து நின்று மரியாதை செய்தார்கள்.
அவர்களோடு அமர்ந்திருந்த சஹாபாக்கள் கூறினார்கள் – அழ்ழாஹ்வின் ரசூலே இது ஒரு யஹூதியின் சவ ஊர்வலம் என்றார்கள்.
உடனே எங்கள் கண்மணி நாயகம் -(ஸல்)அவர்கள் – யஹூதியாயிருந்தாலும், கிறிஸ்தவராயிருந்தாலும், மஜுஸியாய் இருந்தாலும், வேறு எந்த மதத்தை சார்ந்தவரின் மையத்தாக இருந்தாலும் சரியே எழுந்து நின்று அவர் செல்லும் கடைசி பிரயாணத்துக்கு மரியாதை செய்யுங்கள் – என்று திருவாய் மலர்ந்தருளினார்கள்.
என்ன பண்பு ! – நீங்கள் மற்றவர்களுடைய குடும்பத்தாரின் கடைசி பயணத்தை கண்டு மரியாதை செலுத்தும் போது அந்த மையத்தின் குடும்பத்தினர் அதை காண்கிறார்கள் – இப்படிப்பட்ட ஓர் உயர்ந்த பண்பை கண்டு சந்தோஷம் அடைவார்கள் – இருதயங்களிலிருந்த குரோதம், விரோதம் எல்லாமே அகன்று விடுகின்றன – உங்கள் மீது அவர்கள் உள்ளத்தால் உள்ளுணர்வோடு கருனையோடு நடந்துகொள்வார்கள்.
இப்படியான தனிப்பண்புகளையும் அடக்க மரியாதையுடனும் நடக்க கற்றுத்தந்தார்கள் எங்கள் கண்மணி நாயகம் -(ஸல்)அவர்கள்.
இவைகளைப் பார்க்கும் போதும் கேட்கும் போதும் என்ன விளங்குகிறது?
இஸ்லாம் அதன் சகிப்புத்தன்மையை எடுத்து காட்டுகிறது. மத வெறியை வெறுக்கிறது. அருளிறக்கமின்மைக்கு இடமே கிடையாது.
ஆனால் நாங்களோ – பரிதாபம் –
இந்த அதி உண்ணத போதனைகளை எல்லாம் மறந்துவிட்டு, நாம் நிணைத்தது தான் சரி – என்று நாம் நடப்பது மாத்திரமல்லாமல் மற்றவர்களுக்கு, இஸ்லாத்திற்கு எதிர் மாறான விடயங்களை போதணையும் செய்கிறோம்.
எங்கள் மீது அழ்ழாஹ்வின் கோபம் இறங்காதா?
சிந்தனை செய்யுங்கள்.
எங்கள் கண்மணி நாயகம் -(ஸல்)அவர்களின் இணிய வார்த்தைகள் :
இளம் வயதுடையவர்களுக்கு இரக்கம் கருணை காட்டாதவரும் – மூத்தோர் – முதியவர்களுக்கு மரியாதையுடன் நடக்காதவரும் எம்மை சார்ந்தவர்கள் அல்ல -
இந்த ஹதீஸிலிருந்து நாம் விளங்குவது – எங்கள் சமுதாயம் மட்டுமல்ல, சாதி – மத – இண பேதமின்றி மற்ற சமுதாயங்களின் இளையவர்களுக்கு நாம் கருணை, இரக்கம் காட்டி அதே நேரம் நாம் அவர்களின் மூத்தோர் – முதியவர்களோடு மரியாதையுடன் – சங்கையுடன் நடக்கும் போது – நிச்சயமாக – எம்மத்தியில் ஒற்றுமையும், இணக்கமும், ஒத்திசைவும், கருணையும், பரிவும் தூண்டப்பட்டு எல்லோருடனும் இணைந்து வாழ முடியும் என்று அழகாக கூறப்பட்டிருப்பதை அவதானிக்கலாம் அல்லவா ?
இன்னுமோரிடத்தில் எங்கள் கண்மணி நாயகம் -(ஸல்)அவர்களின் இணிய வார்த்தைகளால் கூறும்போது சொன்னார்கள் நீங்கள் உங்கள் சுவர்களை உயர்த்த நாடினால் உங்கள் அண்டை வீட்டாரின் காற்று வழியோ அல்லது வெளிச்சமோ தடைபடும் என்றால், அண்டை வீட்டார் உங்களுக்கு அனுமதி தந்திருந்தாலும் நீங்கள் உங்கள் சுவர்களை உயர்த்த வேண்டாம்.
ஸுப்ஹானழ்ழாஹ் – என்ன வழிகாட்டல்?
அண்டை வீட்டாரோடு ஒற்றுமையுடன் வாழ இந்த இரத்தின போதனைகள் போதாதா?
பிரிவினை, சகிப்பின்மை போன்ற தவறான கூற்றுகளை வேரோடு பிடுங்கி எறிந்து விடுகிறதல்லவா?
அல்-குர்ஆன் எமக்கு அன்றாட வாழ்க்கையில் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பவைகளை விளக்க, கட்டுப்படுத்தப்பட்ட நேரத்துக்குள் முடியாது.
ஆகையால் இரண்டொரு விடயங்களை மாத்திரம் கூறுவோம் “:
இவைகளுக்கு ஆழ்ந்த விளக்கம் தேவை படாது.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ
49:6 – முஃமீன்களே – ஃபாஸிக் – (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டுவந்தால், அதைத்தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள் (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்துவிடலாம்
பின்னர் நீங்கள் செய்தவைப்பற்றி நீங்களே கைசேதப்படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لا يَسْخَرْ قَومٌ مِنْ قَوْمٍ عَسَى أَنْ يَكُونُوا خَيْرًا مِنْهُمْ وَلا نِسَاءٌ مِنْ نِسَاءٍ عَسَى أَنْ يَكُنَّ خَيْرًا مِنْهُنَّ وَلا تَلْمِزُوا أَنْفُسَكُمْ وَلا تَنَابَزُوا بِالألْقَابِ بِئْسَ الاسْمُ الْفُسُوقُ بَعْدَ الإيمَانِ وَمَنْ لَمْ يَتُبْ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ
49:11 – முஃமீன்களே – விசுவாசிகளே – ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரை பரிகாசம் செய்யவேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம் (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்த பெண்களையும் (பரிகாசம் செய்யவேண்டாம்) ஏனெனில் – இவர்கள் அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக்கொள்ளாதீர்கள், இன்னும், உங்களில் ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள். ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப்பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும். எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.
என்ன அருமையான போதனை
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ وَلا تَجَسَّسُوا وَلا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ
49:12 முஃமீன்களே – விசுவாசிகளே – சந்தேகமான- பல எண்ணங்களிலிருந்து, மற்றவர்களை அதிகம் சந்தேகிப்பதிலிருந்து விலகிக்கொள்ளுஙகள், ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும். –பிறர் குறைகளை- நீங்கள் துருவித்துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள் அன்றியும், உங்களில் சிலர் சிலரைப்பற்றிப் புறம் பேச வேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? –இல்லவேயில்லை- அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும் நீஙகள் அழ்ழாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அழ்ழாஹ் ஏற்றுக்கொள்பவன். மிக்க கிருபை செய்பவன்.
அல்-குர்ஆனின் இந்த ஆயத்துக்கள் எல்லோருடைய கண்களை திறந்து வைக்கும் என நம்புகிறோம் – இன்ஷா அழ்ழாஹ்
இந்த அல்-குர்ஆனின் ஆயத்தை சற்று கவணியுங்கள்:
إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَادُوا وَالصَّابِئِينَ وَالنَّصَارَى وَالْمَجُوسَ وَالَّذِينَ أَشْرَكُوا إِنَّ اللَّهَ يَفْصِلُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيَامَةِ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ
22:17 திடனாக ஈமான் கொண்டோர்களே அவர்களுக்கும், யூதர்களாகவும், ஸாபியீன்களாகவும், கிறிஸ்தவர்களாகவும், மஜுஸிகளாகவும், ஆனார்களே அவர்களுக்கும்,
இணைவைப்போராய் இருந்தார்களே அவர்களுக்கும் இடையில் –யார் நேர்வழியில் இருந்தவர்கள் என்பது பற்றி- நிச்சயமாக அழ்ழாஹ் ஃகியாம நாளில் தீர்ப்புக் கூறுவான். நிச்சயமாக அழ்ழாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியமாக இருக்கிறான்.
எங்களுக்கு அதிர்ச்சி ஊட்டுகிறது இந்த ஆயத்து. முஸ்லிம் சமுதாயத்தோடு மற்ற சமுதாயங்களையும் இணைத்து – ஓரே இடத்தில் வைத்து கூறும் இந்த ஆயத்து பலருக்கு அதிர்ச்சியை ஊட்டத்தான் செய்யும்-
இதிலே மற்ற மார்க்கங்களை குறைகான தடுக்கும் ஓர் ஆயத்து – மற்ற மார்க்கங்களுக்கு எதிராக தீர்ப்பளிக்க இஸ்லாம் கண்டனம் தெரிவிக்கிறது.
நீ தீர்ப்பளிக்க தேவையில்லை – உணக்கு தீர்ப்பளிக்க ஒரு அதிகாரமும் இல்லை. இறுதி தீர்ப்பு நாளையில் அழ்ழாஹ் தீர்ப்பளிப்பான். நீ இப்பூவுலகில் ஒற்றுமையுடனும், இணைந்தும் வாழு – என்று வண்மையுடன் அல்-குர்ஆன் கட்டளையிடுகிறதை பார்க்கலாம்.
இது இஸ்லாத்தின் அதி உண்ணத சக்தி – சகிப்புத்தன்மை – சமரச மனப்பான்மை.
இது தான் சத்தியத்தின் மனோபாவம்.
அழ்ழாஹ் அஸ்ஸவஜல் முஸ்லிம்களின் ஆண்டவனோ, யூதர்கள், கிறிஸ்தவர்கள், ஹிந்துக்கள் இன்னும் மற்றவர்களுடைய ஆண்டவனோ மாத்திரமல்ல. எந்த அளவு என்றால் – ஒரு சாராருக்கு மாத்திரம் மழை பொழிவதோ – வெய்யில் இரைப்பதோ இல்லையே! எல்லோருக்கும் ஓரே நீதி – ஓரே அழ்ழாஹ்.
ஓற்றுமையை பாதுகாப்பது எமது அடிப்படை பொறுப்பு – இந்த பொறுப்பை பாதுகாப்பதின் மூலம்தான் எமக்கு உண்மையான சக்தியும் – உண்மையான சுதந்திரமும் இருக்கின்றது.
:
பிரபஞ்சம் அனைத்தும் உள்ளடக்கி எமக்கு அல்-குர்ஆன் தரும் போதனை:
يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ
49:13 மனிதர்களே, நிச்சயமாக நாம் உங்களை ஒர் ஆண், ஓரு பெண்ணிலிருந்தே படைத்தோம் நீங்கள் ஓருவரை ஓருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. உங்கள் மத்தியில் ஓற்றுமையும் ஏற்படுத்தும் பொருட்டு. நீங்கள் ஓருவரோடொருவர் இணைந்து நடக்கும் பொருட்டு. பின்னர் உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம் (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, நேர்மையான நடத்தை, நன்னடத்தை உடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம்
அழ்ழாஹ்விடத்தில் நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அழ்ழாஹ் அறிபவன், )யாவற்றையும் சூழ்ந்து( தெரிந்தவன்.
kdpjth;f;fj;ij mbg;gilahf nfhz;L nghJthd
மனிதவர்க்கத்தை அடிப்படையாக கொண்டு பொதுவான அடிப்படையில் எங்கள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் போதனையை பாருங்கள்:
ليس العربيٌّ على عجميٌّ فّضْلٌ ولا العجميٌّ على عربيٌّ فضْلٌ –
ولا الأبْيَضَ على أسود فَضْلٌ ولا الأسْوَد عَلى أبْيَضَ فَضْلٌ – إلاّ بِا التَّقْوى
சொன்னார்கள் ஒர் அரபி – அரபியல்லாதவரை விட மேலானவரும் அல்ல, அரபியல்லாதவர் அரபியைும் விட மேலானவரும் அல்ல. வெள்ளையர் கருப்பரையும் விட மேலானவரும் அல்ல, கருப்பரும் வெள்ளையரை விட மேலானவரும் அல்ல. தஃக்வா – அழ்ழாஹ்வின் அச்சம் உடையவராக இருக்கின்றாரோ, நேர்மையான நடத்தை, நன்னடத்தை உடையவராக உடையவராக இருக்கின்றாரோ, அவர்தான் மேலானவர் – என்று கருத்துப்பட அருமையாக அறிவுறுத்தினார்கள்.
ஆகவே எனது அருமை சகோதரர்களே, அருமை சகோதரிகளே, கண்ணியமிக்க உலமாக்கலே, உங்களை குற்றம் கண்டு பிடிப்பதற்காக இதை நாம் கூறவில்லை –
கண்டனம் தெரிவிக்கும் நோக்கோடும் சொல்லவில்லை-
காணாமற்போன எமது அரும்பெரும் செல்வத்தை மீட்டி எடுப்பதற்காக உங்களின் ஆவலை தூண்டிவிடவேண்டும் எனும் நோக்கோடு தான் இதை உங்கள் முன் வைத்தோம்.
அப்போதுதான் நாம் எவ்வளவு பெருமதிவாய்ந்த ஓரு செல்வத்தை இழந்திருக்கிறோம் என்பது புலனாகும்.
இப்படி கடுமையான சொற்கள் உபயோகித்தது உங்கள் சிந்தனை ஆற்றலை தூண்டும் நோக்கோடுதான்.
ஆகவே எல்லாம் வல்ல அழ்ழாஹ் எங்களையும் உங்களையும் நேர் வழியில் நடத்துவானாக – அது எவர்களுக்கு அவன் அருள் புரிந்தானோ அவ்வழியில் நடத்துவானாக. அவன் கோபத்துக்கு ஆளானோர் வழியிலிருந்தும், நெறி தவறியோர் வழியிலிருந்தும் எம்மை காப்பாற்றுவானாக.
وآخِرُ دَعْوَانَا اَن ِالْحَمْدُ لِلهِ رَبِّ الْعَالَمِيْن
السّلام عليكم ورحمة الله وبركاته
No related posts.


0 Responses
Stay in touch with the conversation, subscribe to the RSS feed for comments on this post.